குடியரசு தினவிழாவில் காமராஜர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கலெக்டர் பாராட்டு

வேலூர், ஜன.29: குடியரசு தினவிழாவில் காமராஜர் விருது பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரை கலெக்டர் பாராட்டினார். தமிழகத்தில் ஆண்டுதோறும் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடும் பள்ளி தேர்ந்தெடுத்து காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2019-20ம் ஆண்டில் காமராஜர் விருதை வேலூர் அம்பேத்கர் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. 71வது குடியரசு தினவிழாவில், காமராஜர் விருதை கலெக்டர் சண்முகசுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியர் குமார், உதவி ஆசிரியர் மோகன்குமார் ஆகியோருக்கு விருது மற்றும் ₹50 ஆயிரம் காசோலை வழங்கி பாராட்டினர். உடன் டிஆர்ஓ பார்த்தீபன், சிஇஓ மார்ஸ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: