×

சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டில் அதிக சுங்க கட்டணம் வசூலித்ததால் மோதல்

சேலம், ஜன.29: சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்கெட்டில் அதிக சுங்க கட்டணம் வசூலித்ததால் திடீரென மோதல் ஏற்பட்டது. போலீசார் எச்சரிக்கையை தொடர்ந்து, மோதலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட்டிற்கு தினமும் 500க்கும் மேற்பட்ட லாரிகள், டெம்போக்கள் சென்று வருகின்றன. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதியை ஒருவர் ஏலம் எடுத்து வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலித்து வருகிறார். நேற்று காலை அங்கு வந்த டெம்போக்களிடம் சுங்கம் வசூலித்தனர். அப்போது ₹10க்கு ரசீது கொடுத்துவிட்டு ₹20 கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு டிரைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். ‘‘₹10க்கு ரசீது கொடுத்து விட்டு ₹20 ரூபாய் கேட்டால் நாங்கள் எப்படி தருவோம்’’ என கேட்டனர். ஆனால் ஏலம் எடுத்தவர்கள் தரப்பினர் ‘‘பணம் தராமல் வண்டியை விடமாட்டோம்’ என்றனர்.
இதனால் அங்கிருந்த லாரி, டெம்போ டிரைவர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ‘‘எந்த பிரச்னையாக இருந்தாலும் மாநகராட்சியில் புகார் கொடுங்கள். அல்லது காவல்நிலையம் வந்து புகார் கொடுங்கள். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Salem Tuesday ,collision ,
× RELATED வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில்...