×

இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேமென்ட் திட்டம்

சேலம், ஜன.29: டிஜிட்டல் பேமென்ட் திட்டத்தில் பயன்பெற இண்டேன் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இண்டேன் விநியோகஸ்தர்கள், இண்டேன் எல்பிஜி வீட்டு உபயோக சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கு வழங்குகிறார்கள். சிலிண்டர் ஒப்படைத்த உடன் வாடிக்கையாளர் கையொப்பமிடும் கேஷ் மெமோவில் சில்லறை விற்பனை விலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலை, டெலிவரி செய்யப்படும் சிலிண்டருக்கான ஒப்படைப்பு கட்டணத்தை உள்ளடக்கியதாகும். இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை செலுத்துவதற்காக, வாடிக்கையாளர்களை டிஜிட்டல் பேமென்ட் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆன்லைனில் பேமென்ட் செலுத்துவதற்கான வழிமுறை  வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மூலம்  சிலிண்டர் பெற புக்கிங் செய்தவுடன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு மெசேஜ் மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த லிங்க் ஒரு நாளைக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த ஆன்லைன் முகவரியை கிளிக் செய்து வாடிக்கையாளர்கள் கேஷ் மெமொவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ வாலெட் ஆகிய பல்வேறு ஆன்லைன் பேமென்ட் வழிமுறைகள் வாயிலாக செலுத்தலாம். இந்த வழிமுறையில் சிலிண்டர்  டெலிவரிக்கு பின்பு வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.

முதலில் குறிப்பிடப்பட்ட வழிமுறையை வாடிக்கையாளர்கள் கையாளாவிட்டால், டெலிவரி பணியாளரை, தங்களிடம் சிலிண்டரை ஒப்படைக்கும் தருணத்தில் டிஜிட்டல் பேமென்ட் பெறும்படி வலியுறுத்தலாம். அவர்களை பேமென்ட் பெறும் கருவியை  கொண்டு வருமாறு கூறலாம். அந்த கருவியை கொண்டு நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இவாலெட், BHIM, UPI, Google Pay, PayTM ஆகியவை மூலமாக பில் செலுத்தலாம். பணமாக செலுத்துவதை இறுதி வழியாக வைத்துக் கொள்ளலாம். சிலிண்டர்  டெலிவரி செய்யப்பட்டதும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் அனுப்பி வைக்கப்பட்டது குறித்து மெசேஜ் அனுப்பப்படும்.  இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நன்றாக சேவை வழங்க முடியும். எல்பிஜி குறித்த அவசர சேவை குறித்து 1906 என்ற எண்ணில் 24 மணி நேர சேவையை அணுகலாம். இண்டேன் குறித்த புகார்களுக்கு 18002333555 என்கிற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Clients ,
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...