அகில இந்திய அளவிலான ஜெய் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

சேலம், ஜன.29: சேலம் வாய்க்கால்பட்டறையில் உள்ள ஜெய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஜெய் நர்சரி பிரைமரி பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. சேலம் மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘மாணவர்கள் படிப்பது ஒன்றே குறிக்கோளாக கொண்டு படிக்க வேண்டும். பெற்றோர் தங்களுக்கு பிடித்தமான துறையை தேர்ந்தெடுத்து இதுதான் படிக்க வேண்டும் என குழந்தைகளிடம் திணிக்க கூடாது.

அப்போது தான் அவர்களிடம் இருக்கும் திறமை வெளிப்படும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும். எனவே, குழந்தைகள் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும் பெற்றோர் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும்,’ என்றார். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கான காவலன் ஆப் பதிவிறக்கம் குறித்தும் விளக்கம் அளித்தார். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு சாகசங்களை பாராட்டி பள்ளியின் தாளாளர் சுப்பையா, முதல்வர் ஜெய்முருகன் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

Related Stories: