×

பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்ற துணிப்பை தைத்து விழிப்புணர்வு

தேன்கனிக்கோட்டை, ஜன.29:  அஞ்செட்டி அருகே சாகலபள்ளி ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்றும் முயற்சியாக  அரசு பள்ளி மாணவர்கள், துணிப்பை தைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அஞ்செட்டி அருகே உள்ள சாகலப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 360 மாணவ, மணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக ஜெயசீலன் பணிபுரிகிறார். இப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாக்க பறவைகளுக்கு உணவு அளித்தல், மாடுகளை பூட்டி ஏர் உழுது விவசாயம் செய்தல், பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையடுத்து, மாணவர்கள் சாகலப்பள்ளி ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லாத கிராமமாக மாற்றும் முயற்சியாக ஆசிரியர்கள் உதவியுடன் பூ வேலைபாடுகளுடன் துணி பைகளை தைத்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 160 துணி பைகளை தைத்துள்ளனர். அதை கடைகளில் கொடுத்து, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளனர். மேலும், தங்களது பெற்றோர்களிடம் பைகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக உறுதி ஏற்றனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் செயசீலன் கூறுகையில் இயற்கையை பாதுகாக்க, பிளாஸ்டிக் இல்லா கிராமமாக மாற்றும் முயற்சியாக மாணவர்களை கொண்டு துணி பைகளை தைத்துள்ளோம். அதன்படி, பிளாஸ்டிக் இல்லாத குடும்பத்தை தேர்வு செய்து பரிசு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Tags :
× RELATED வாக்குப்பதிவு குறைந்த பகுதியில் அதிகாரிகள் விழிப்புணர்வு