×

அரசு கல்லூரியில் தொழில்நெறி கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தொழில்நெறி வழி காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி முதல்வர் (பொ) பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார். கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில்,  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. கல்லூரி பருவத்தில் மாணவ, மாணவிகள் அறம் சார்ந்த கல்வியை கற்க வேண்டும். போட்டி தேர்வுகளை எதிர் கொள்ள திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்காக கண்காட்சி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து, தொழில்நெறி வழிகாட்டி கையேட்டை வெளியிட்டு கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் (மாநிலவரி) அருண்சங்கர், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவது, தேர்வுகளை எதிர்கொள்வது குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்ட புள்ளியியல்துறை துணை இயக்குநர் குப்புசாமி டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்தும், முன்னோடி வங்கி மேலாளர் பாஸ்கர் வங்கி வேலைவாய்ப்பு மற்றும் கடன் உதவி பற்றி பேசினார். சுயவேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் பேசினார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மோனிஷா நன்றி கூறினார்.

Tags : Career Seminar ,Government College ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்