×

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாலஜங்கமனஅள்ளியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 6 முதல் 10ம் வகுப்பு வரை 131 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 4 ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. பள்ளி தலைமையாசிரியராக பெருமாள் பணியாற்றி வருகிறார். பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் பாலஜங்கமனஅள்ளி பள்ளிக்கு, ஈச்சம்பட்டி அரசு பள்ளியில் இருந்து ஆசிரியைகள் உமா ரமணி, பூங்கொடி தலைமையில் 20 மாணவ, மாணவிகள் களப்பயணம் சென்றனர். அந்த மாணவர்கள் இப்பள்ளியில் உள்ள கற்றல் உத்திகள். ஆய்வகம், இயற்கை சூழல், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பரிமாற்று பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினர். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு புதிய அனுபவம் கிடைத்தது.

இது குறித்து ஈச்சம்பட்டி பள்ளி மாணவ, மாணவிகளிடம் களப்பயணம் குறித்து கூறியதாவது: இது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. அறிவியல், வேதியியல் சம்பந்தப்பட்ட பயன் உள்ள பாடங்களை கற்று கொண்டோம். இங்கு சோப் தயாரித்தல் போன்றவற்றை அறிந்து கொண்டோம். எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு, இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது என்றனர். முன்னதாக பள்ளி பரிமாற்றத்தின் கீழ் வந்த ஈச்சம்பட்டி பள்ளி மாணவ, மாணவிகளை பால ஜங்க மனஅள்ளி மாணவ, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா