சி.ஏ.ஏ., என்.ஆர்.சி, என்.சி.ஆர்.யை திரும்ப பெறக்கோரி பிப்.2ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்

தாராபுரம், ஜன.29:  திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பழைய நகாரட்சி கட்டிட வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன் தலைமை வகித்தார். நகர செயலாளர் தனசேகர், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தென்னரசு, மா.கம்யூ. சார்பில் முத்துக்கண்ணன்,  வெங்கட்ராமன், இ.கம்யூ. சார்பில் மாவட்ட நிர்வாக குழு ரகுபதி,  ம.தி.மு.க. சார்பில் கவின் நாகராஜ், சந்திரசேகர், வி.சி.க.  சார்பில் முத்தமிழ் வேந்தன், ஆதித்தமிழர் பேரவை பொன் செல்வம், தமிழக  வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர்  சண்முகம், மனிதநேய மக்கள் கட்சி அபுதாஹிர், உழவர் உழைப்பாளர் கட்சி  ஈஸ்வரமூர்த்தி, முஸ்லிம் லீக் சாதுல்லாஹ் உட்பட மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணியின் தோழமை கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை மக்கள் மீது திணித்த மத்திய பா.ஜ. அரசின் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளின் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தே தீருவோம் என்று கூறிவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அதற்கு துணை நிற்கும் பிரதமர் மோடியையும் வன்மையாக கண்டிப்பது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.. எம்.பி.க்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை கண்டிப்பது.

நாட்டை பிளவுபடுத்தும் மனப்பான்மையுடன் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை பெற வலியுறுத்தி பிப்ரவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் ஆகியோரை சந்தித்து தமிழக மக்களின் எதிர்ப்பை நேரில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மூலனூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முருகேசன், காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிதம்பரம், ம.தி.மு.க. மாரியப்பன், தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், உதயகுமார், பொறியாளர் அணி பாப்பு கண்ணன், சக்திவேல், சீனிவாசன், அன்பு முத்துமாணிக்கம், மதி, பொறியாளர் சிவகுமார்,திராவிடர் கழகம் நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் முருகன், மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் சாதிக் பாட்ஷா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: