யுனிவர்சல் மெட்ரிக் பள்ளியில் மின்னணு தொழில்நுட்ப கட்டிடம் திறப்பு

திருப்பூர், ஜன.29:   திருப்பூர்  சேடபாளையம் பகுதியில் யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு  வருகிறது. இந்த பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மின்னணு  தொழில்நுட்ப கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கோவை எம்.பி. நடராஜன், பல்லடம் எம்.எல்.ஏ. நடராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி  திறந்து வைத்தனர். பள்ளியின் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள், ஏலாலங்கடியோ  கலைக்குழுவின் கிராமிய பாடல்கள் நிகழ்ச்சி, கிராமிய பாடகர்கள் செந்தில்கணேஷ்,  ராஜலட்சுமியின் கிராமிய பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் ராஜகோபால், முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ்,  மாவட்ட கல்வி அலுவலர் நாகராஜன், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  பாரதி சின்னப்பன், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: