×

கலெக்டர் பெயரை பயன்படுத்தி வி.ஏ.ஓ.வை மிரட்டிய வருவாய் ஆய்வாளர்

திருப்பூர், ஜன.29:  திருப்பூரில், மணல் கடத்திய லாரியை விடுவிக்க வி.ஏ.ஓ.வை மிரட்டிய வருவாய் ஆய்வாளர் சர்சை ஆடியோ குறித்து இருவருக்கும் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காட்டூர் கிராமத்தில் கடந்த 24ம் தேதி அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை வி.ஏ.ஓ. கார்த்திக் பிடித்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த பொங்கலூர் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, வி.ஏ.ஓ.விற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு லாரியை விடுவிக்கப்படி கூறியுள்ளார். மேலும், லாரியின் உரிமையாளர்கள் தாசில்தார் முதல் கலெக்டர் வரை பார்க்கிறார்கள் என மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். இத்தகைய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக, நேற்றுமுன்தினம் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் மற்றும் வருவாய் அலுவலர் சுகுமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், நேற்று வி.ஏ.ஓ. கார்த்திக் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி ஆகியோருக்கு சர்ச்சை பேச்சு குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் கவிதா சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மோடி அரசு தொடர்ந்து தவறு செய்து வருகிறது

Tags : Revenue Analyst ,Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...