வீட்டை உடைத்து யானைகள் அட்டகாசம்

வால்பாறை, ஜன.29: வால்பாறையில் காட்டு யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. வால்பாறை அடுத்துள்ள ஐயர்பாடி ரோப் ரோப்வே எஸ்டேட்டில் நேற்று அதிகாலை புகுந்த 6 காட்டு  யானைகள்,  தொழிலாளர்  குடியிருப்பில் முகாமிட்டது. பின்னர், முருகேசன் என்பவர் வீட்டு ஜன்னலை உடைத்து உணவு தேடியது. இதைப்பார்த்த அப் பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை அப்பகுதியில் உள்ள வனத்திற்குள் விரட்டியடித்தனர். யானைகள் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, ஆனைமுடி எஸ்டேட்டில் தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் சிலரை நேற்று  காலை காட்டு யானைகள் விரட்டி உள்ளது. அனைவரும் தப்பி ஓடினர். சிலர், கீழே விழுந்ததால் லேசான காயம் ஏற்பட்டது.

Tags : house ,
× RELATED டால்பின் முனைக்கு செல்ல அனுமதி