ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் உக்கடத்தில் கோயில் இடித்து அகற்றம்

கோவை, ஜன.29:  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளம் கரை அழகு படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, உக்கடம் பேரூர் பைபாஸ் ரோட்டில் மீன் மார்க்கெட் அருகே பழமை வாய்ந்த எல்லை மாகாளியம்மன் கோயில் இடித்து அகற்றப்பட்டது. உக்கடம் பேரூர் பைபாஸ் ரோட்டில் மீன் மார்க்கெட் அருகே பழமை வாய்ந்த எல்லை மாகாளியம்மன் கோயிலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இந் நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு இடையூறாக உள்ள எல்லை மாகாளியம்மன் கோயிலை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கோயிலை அப்புறப்படுத்தக் கூடாது என தகராறு செய்து வந்தனர். இந் நிலையில், கோவை மாநகராட்சி நகர திட்ட அமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன், போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், உக்கடம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கோயிலில் இருந்த சாமி சிலையை பொதுமக்கள் எடுத்து சென்றனர். இதையடுத்து பழமை வாய்ந்த எல்லை மாகாளியம்மன் கோயில் ஜேசிபி உதவியுடன் இடித்து அகற்றப்பட்டது.

Related Stories: