×

டெல்லி குடியரசு தினவிழாவில் எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவர்கள் சாதனை

கோவை, ஜன.29: மேட்டுப்பாளையம்  சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி மாணவி டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் பாரத பிரதமரிடம் இருந்து விருதை பெற்றார். டெல்லியில் நடந்த 71வது குடியரசு தின விழாவில் மேட்டுப்பாளையம்  சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி ஸ்ரேயா ஷஜீவ் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆல் இந்தியா பெஸ்ட் கேடட் என்ற விருதை வழங்கினார். மேலும், 9ம் வகுப்பு மாணவர்  நிஷாந்த் தமிழகம் சார்பாக ஜூனியர் டிவிசன் கேடட் பிரிவில் பிரதமர் ரேலியில் கலந்து கொண்டார். இவர்கள் கடந்த 2019ல் தமிழக அளவில் நடந்த என்.சி.சி முகாம்களில் வெற்றி பெற்றதன் மூலம் டெல்லி சிறப்பு முகாமிற்கு தேர்வு பெற்றனர். இவர்களை பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ், மற்றும் பலர் பாராட்டினர்.

Tags : Delhi Republic Day Festival ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்