பி.கே.பி சாமி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா

மொடக்குறிச்சி, ஜன. 29:  மொடக்குறிச்சி அடுத்த ஈஞ்சம்பள்ளி பி.கே.பி சாமி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு பி.கே.பி கல்வி நிறுவனங்களின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் பி.கே.பி அருண் வரவேற்றார். பிகேபி கல்வி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினர் பழனிசாமிக்கவுண்டர், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சுரேஷ் பொண்ணுவேல், கல்யாணி சின்னசாமி, திலகவதி அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாள் நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றியக்குழு தலைவர் கணபதி, ஆவின் இயக்குனர் அசோக், ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி  இயக்குனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி முதல்வர் வைஜெயந்தி நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு  பரிசுகளை வழங்கினார். இதையடுத்து தமிழருவி மணியன் பேசியதாவது: புத்தகத்திற்கு மறுபெயர் நூல், கோணலாக உள்ள மரத்தை நேராக அறுப்பதற்கு தட்சர்கள் பயன்படுத்துவது நூல் தான். அதே போல் மனதில் உள்ளதையும் சரி படுத்துவதும் புத்தகம் என்ற நூல் தான். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம் என்றார்.

Related Stories: