பண்ணாரி அம்மன் கல்லூரியில் குடியரசு தின விழா

சத்தியமங்கலம், ஜன. 29:  சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில்  குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடினர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாக்டர் தங்கராஜ் கொடியேற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் 112 தேசிய மாணவர் படை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும்  முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்த ஆண்டு என்.சி.சி சார்பில் நடைபெற்ற பல்வேறு முகாம்களில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. இக்கல்லூரியை சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவி ஹரிணி டெல்லி  ராஜ்பாத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். முடிவில் என்.சி.சி அதிகாரி கலீல் ரகுமான் நன்றிகூறினார்.

Advertising
Advertising

Related Stories: