ஓய்வூதியர்களுக்கு 7வது ஊதியக்குழு, மருத்துவ காப்பீட்டு தொகை நிலுவை

புதுச்சேரி, ஜன. 29:  புதுவை மிகவும் பிற்படுத்தப்பட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நலச்சங்க கவுரவ தலைவர் விஸ்வநாதன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: புதுவையில் அரசு ஓய்வூதியதாரர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்களுக்கு சேர வேண்டிய 7வது ஊதியக்குழுவின் நிலுவை தொகை மற்றும் மருத்துவ காப்பீட்டு நிலுவை தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்டிசி, யுடிசி, உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

Advertising
Advertising

12 ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் இருதய கோளாறு, அறுவை சிகிச்சை, சிறுநீரக கோளாறு, கல்லீரல், நுரையீரல் பிரச்னை மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களில் இருந்து காப்பாற்ற அவர்களிடம் இருந்து சந்தா வசூலிக்காமல் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் ரூ.5 லட்சம் வரை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: