திண்டிவனம் அருகே புதுவை மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது

திண்டிவனம், ஜன. 29: திண்டிவனம் அடுத்த உலகாபுரம் பகுதியில் பிரம்மதேசம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கிளியனூர்- உலகாபுரம் வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 132 புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் 5 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு ஆரோவில் நகரை சேர்ந்த கோபி மகன் விஜய்(22), காஞ்சிபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த சிறுகரணை கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் அருண்(30) என்பது தெரிய
வந்தது. இருவரையும் கைது செய்த பிரம்மதேசம் உதவி ஆய்வாளர் சசிகுமார் மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்.

இதேபோல் உலகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் 187 புதுச்சேரி மதுபாட்டில்கள் மற்றும் 35 லிட்டர் விஷநெடி உள்ள சாராயம் கடத்தி வந்தவரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவரை பிரம்மதேசம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது, புதுச்சேரி தேங்காய்த்திட்டு வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலு(36) என்பது தெரியவந்தது. இவர் தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர் கடத்திவரப்பட்ட புதுச்சேரி மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்த ஆய்வாளர்(பொறுப்பு) சீனிபாபு, புதுச்சேரி மதுபாட்டில், சாராயம் கடத்தி வந்த பாபு என்பவரை கைது செய்தனர்.

Tags : kidnapping ,
× RELATED செம்மண் கடத்திய 2 பேர் கைது