×

காரைக்கால் அம்பகரத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

காரைக்கால், ஜன. 29: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, காரைக்கால் சைல்டு லைன் அமைப்பு சார்பில் அம்பகரத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறுவர்களுடன், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். பேரணியை அம்பகரத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தொடங்கி வைத்து பேசும்போது, இன்றைய காலக்கட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மிக அவசியம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக அதிகமான விழிப்புணர்வு பல்வேறு தரப்பின் மூலம் ஏற்படுத்தப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பில் குழந்தைகள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் உரிய கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்கள் தற்காப்பு கலையை கற்றுக்கொள்வது நல்ல பயனைத்தரும்.

பாதுகாப்புக்காக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ, 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றார். காரைக்கால் சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் விமலா, சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள், 1098 என்ற எண்ணை எந்தெந்த சூழலின் போதும் தொடர்பு கொள்ளலாம் என்பது குறித்து விளக்கினார். கல்லடி தெருவில் தொடங்கிய பேரணி, பல்வேறு குடியிருப்பு சாலைகளில் சென்று நிறைவுபெற்றது. ஏற்பாடுகளை சைல்டு லைன் பணியாளர்கள் புஷ்பநாதன், நர்மதா, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.




Tags : Child protection awareness rally ,Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...