×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காரைக்கால் திருபட்டினத்தில் கண்டன பேரணி-ஆர்ப்பாட்டம்

காரைக்கால், ஜன. 29: இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காரைக்கால் திருபட்டினத்தில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், திரும்பப்பெறக் கோரியும் தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேசத்தை மத ரீதியாக பிளவுபடுத்தும் பாஜக மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெறக் கோரியும் திரு-பட்டினம்  சிஏஏ மற்றும் என்ஆர்சி எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் பெரிய பள்ளிவாசலில் இருந்து பேரணி புறப்பட்டு போலகம் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நெய்னா மரைக்காயர் தலைமை தாங்கினார். தொகுதி எம்எல்ஏ கீதா ஆனந்தன் பேரணியை துவக்கி வைத்தார். பேராசிரியை சுந்தரவள்ளி கண்டன உரையாற்றினார், இதில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,Karaikal Tirupattinam ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்