×

8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி, ஜன. 28: புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை 27ம் தேதி (நேற்று) முதல் 31ம் தேதி வரையிலான நாட்களில் மரப்பாலம் செவன்த்டே மேல்நிலைப்பள்ளி   சேவை மையத்தில் நேரில் சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.125 (அனைத்து பாடங்களுக்கும்) மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50 சேர்த்து மொத்தமாக ரூ.175ஐ பணமாக செலுத்த வேண்டும்.

முதன் முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் பள்ளி மாற்று சான்றிதழ் அசல் அல்லது பிறப்பு சான்றிதழ் அசல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை மட்டும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தை தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் அவர்கள் பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை சமர்ப்பிக்க ேவண்டும். மேலும் ரூ.42க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, சுய முகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : General Elections ,
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...