×

தமிழகத்தில் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

கடலூர், ஜன. 29: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு போர்வையாக பயன்படுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழகத்தை வன்முறை காடாக மாற்றி வருகின்றன. இச்சட்டத்தால் இந்தியாவில் யாருக்கும் பாதிப்பு இல்லை. இஸ்லாமிய பயங்கரவாத தொட்டிலாக தமிழகம் விளங்கி வருகிறது. நாடு முழுவதும் 31 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 17 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கடலூரை சேர்ந்த 2 பேர் முக்கிய தீவிரவாதிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய பயங்கரவாதிகள் கைது செய்யப்படும் நிலையில் அவர்கள் ஜாமீனில் வெளியே விடும்பட்சத்தில் மேலும் சில குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

திருச்சியில் ரகு என்ற தலித் இளைஞர் கொலை வழக்கில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஒன்றும் பேசாமல் இருப்பது தலித் விரோத செயல். திருச்சி விஜயரகு கொலைக்கு ஏன் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதன் மூலமாக அவர் தலித் விரோதியாக மாறிவிட்டார், இவ்வாறு அவர் கூறினார். பின்னர் நடந்த பொதுகூட்டத்திற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கணபதி வரவேற்றார். மாவட்ட தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பெரியசாமி, விநாயகமூர்த்தி, ரங்கேஸ், ஸ்ரீதரன், எழிலரசன், புனிதவேல், தேவி முருகன், விஜயரங்கன், சிவகுமார், கோவிந்தராஜ், லட்சுமிநாராயணன், வினோத்குமார், துரை தேவன், பொன்னி ரவி, திருமுருகன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சங்கர் கணேஷ், முன்னிலை வகித்தனர். பாஜக தேசிய செயலாளர் ராஜா சிறப்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் சரவணன், நிர்வாகிகள் குணசேகரன், சுகுமார், அருள், வேல்முருகன், மணிகண்டன் மற்றும் ஊடகப்பிரிவு ஜெனித் மேகநாதன், திருவந்திபுரம் தர், வழக்கறிஞர் சக்திவேல், பிஎஸ்ஆர் பாஸ்கர், இந்திரஜித், ஆறுமுகம், சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தேர்தல் பொறுப்பாளர் முருகன் நன்றி கூறினார்.

Tags : Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...