×

கடலூரில் கடையடைப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை

கடலூர், ஜன. 29: கடலூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி வாடகைதாரர்கள் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, நகராட்சியை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் நகராட்சி வாடகைதாரர்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவராக ராஜேந்திரன், செயலாளராக மதிசேகர், நிர்வாகிகளாக எழிலரசன், அய்யூப், அருணாசலம், நாராயணன், அசோக், ஏகாம்பரம், ஜெயசந்திரன், சிவா, கணபதி, சேகர், சுந்தர் உள்ளிட்டோர் தேர்ந்ெதடுக்கப்பட்டனர். கூட்டத்தில் நகராட்சி எல்ைலக்குட்பட்ட கடை வாடகைதாரர்கள் கூட்டமைப்பாக செயல்படுவது, நகராட்சி வாடகை சம்பந்தமாக எந்த முடிவு எடுத்தாலும் கூட்டமைப்பை கூட்டி நகராட்சி முடிவெடுக்க வேண்டும். நகராட்சி வாடகைதாரர்கள் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி வாடகை உயர்வை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.அதன்படி நேற்று கடலூர் நேதாஜி சாலை, பாரதி சாலை, பான்பரி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சி கடைகளில் வாடகை இருக்கும் கடைக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டது.

21 மாதங்கள் முன் தேதியிட்ட பன்மடங்கு வாடகை உயர்வை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதை வாடகைதாரர்களுக்கு அமல்படுத்த வேண்டும். பன்மடங்கு வாடகை உயர்வை ரத்து செய்து புதிய வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும். சீல் வைத்துள்ள கடைகளை உடனே திறந்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அய்யூப், பஷீருல்லா, ரங்கராஜன், குமார், சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக பாரதி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக வியாபாரிகள் தரப்பு சென்ற போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடைபெற்ற நிலையில் நகராட்சி வாயில் கதவு மூடப்பட்டது. இதனால் நகராட்சிக்கு வரி செலுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக வந்த அலுவலர்கள், பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. டிஎஸ்பி சாந்தி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : office blockade ,Cuddalore ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...