×

புளியரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டை. ஜன. 28: புளியரை போக்குவரத்து  சோதனைச் சாவடியில் 31வது வார சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது.  புளியரையில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா தொடர்ந்து நடந்துவருகிறது. இதையொட்டி வாகனஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புளியரை  போக்குவரத்து  சோதனைச் சாவடியில் 31வது வார சாலை பாதுகாப்பு வார விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற புளியரை அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி வீதிகளில் அணிவகுத்து சென்றனர். விழாவுக்குத் தலைமை வகித்த  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி, பேரணியை கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.  நேர்முக உதவியாளர் போத்திராஜ்,  மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். புளியரை போக்குவரத்து சோதனைச் சாவடியில் இருந்து துவங்கிய இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக புளியரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. புளியரை சோதனை சாவடி  அலுவலக உதவியாளர் ராமசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED தென்காசியில் ராம் நல்லமணி யாதவா கல்லூரி பட்டமளிப்பு விழா