தூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் பெறலாம்

தூத்துக்குடி,ஜன.28: பிப்.1ம் தேதி முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி:தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வருகிற பிப்.1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. ஒரு கடையில் சர்க்கரை இல்லை என்றால் வேறு கடையில் வாங்கிக்கொள்ளலாம். மேலும், மார்ச் மாதம் முதல் நெல்லை - தூத்துக்குடி மாவட்ட மக்கள் இரு மாவட்டங்களில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். எந்த கடைகளில் மக்கள் அதிகளவில் பொருட்கள் வாங்குகிறார்களோ, அந்த கடைகளில் பொருட்கள் அதிக சப்ளை வழங்கப்படும்.

 எனவே, பிப். 1ம் தேதி முதல் ரேஷன் கடைகாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டும். மார்ச் முதல் நெல்லை மாவட்ட மக்களுக்கும் பொருட்கள் வழங்க வேண்டும். பொருட்கள் வழங்க மறுப்பதாக புகார் வந்தால் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநிலத்தில் உள்ளவர்கள் தற்போது இந்த திட்டத்தில் பெயன்பெற முடியாது. அதற்கான உத்தரவு எதையும் அரசு வெளியிடவில்லை. தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார் வந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பேச்சுவார்ததை நடத்தப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்ட இன்னும் ஒரு மாதகாலத்திற்குள் அனுமதி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். தற்போது சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    நாளை மறுநாள் கோவில்பட்டி யூனியன்  தலைவர், துணைதலைவர் தேர்தல்:   கோவில்பட்டி யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி மற்றும் 4 பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறினார்.

Related Stories: