11 சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் இட மாற்றம்

புதுச்சேரி, ஜன. 28: புதுச்சேரி சுகாதாரத்துறையில் 9 சுகாதார ஆய்வாளர்கள், 2 சுகாதார உதவியாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, காரைக்கால் நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் வெங்கடேஸ்வரன் புதுச்சேரி மலேரியா உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும், அங்குள்ள வெங்கடேசன் ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், அங்கு பணிபுரியும் ஜீவானந்தம் என்ற கருப்பையா காரைக்கால் அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மதிவதனன் காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், அங்குள்ள மதியழகன் நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் ஆனந்து நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய ஜெயகாந்தன் வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், அங்குள்ள பத்மநாதன் லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார உதவியாளர் சுதாகர் கொசப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சுகாதார உதவியாளர் ரெமோ காரைக்கால் துணை இயக்குனர் (நோய் தடுப்பூசி பிரிவு) அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி தில்லைவேல் பிறப்பித்துள்ளார்.

Related Stories: