அரசு தொடக்க பள்ளிக்கு சர்வதேச வானவியல் விருது

புதுச்சேரி, ஜன. 28:  புதுச்சேரி முதலியார்பேட்டை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி சர்வதேச வானவியல் ஒன்றியம் நடத்திய நூற்றாண்டு கொண்டாட்டத்தில் ஒரு ஆண்டு முழுக்க வானவில் தொடர்பான செயல்பாடுகளை செய்து கலந்து ெகாண்டது. ஒரு நூற்றாண்டு வானவியல் கண்டுபிடிப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக, கல்வி மேம்பாடு மற்றும் மிகச்சிறந்த கருவியாக வானவியலை பயன்படுத்தவும் ஒரே வானத்தின் கீழ் என்ற மையக்கருத்தை மையமாக கொண்டு இந்த நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் ஆசிரியர் அரவிந்தராஜா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களுக்கு நிலவு மாதிரி முப்பரிமாண வடிவில் செய்தல், பெண் வானவியலறிஞர்களின் சாதனைகளை எடுத்துரைத்தல், சந்திர கிரகணம், சூரிய கிரகணம் உற்றுநோக்கி பதிவு செய்தல் போன்ற விழிப்புணர்வு செயல்பாடுகளை செயல் விளக்கம்

அளித்தார்.

மேலும், அவர் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நடைபெறுதலை புகைப்படம் எடுத்து புகைப்பட கண்காட்சி நடத்தினார். மேலும், `நிலவில் தரையிறங்குதல் 50’ என்ற தலைப்பில் சர்வதேச வானவியல் ஒன்றிய செயல்பாட்டில் மாணவி விஜயாவின் ரங்கோலி ஓவியத்தை வரைய செய்து,

அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர். இதுபோன்ற 15 செயல்பாடுகள் கடந்த 6 மாத காலம் மாணவர்கள் செய்திருந்தனர்.இச்செயல்பாடுகளை சர்வதேச வானவியல் ஒன்றிய மதிப்பீடு செய்து ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு அனைவருக்கும்வானவியல் பரிசை வழங்கியுள்ளது. மேலும், பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த பரிசை பள்ளி இணை இயக்குநர் (பெண் கல்வி) விஜயகுமாரி வழங்கினார்.

Related Stories: