திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு செல்ல சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்

திண்டிவனம், ஜன.  28:     திண்டிவனம்  அடுத்த ஜக்காம்பேட்டையில் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது.  திண்டிவனத்தில் இருந்து நீதிமன்ற வளாகம் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு செல்ல திண்டிவனத்திலிருந்து தென்பசார் வரை  சென்று மீண்டும் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திரும்பி நீதிமன்றத்திற்கு  வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. திண்டிவனம் நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர்  தொலைவில் உள்ள நீதிமன்றத்திற்கு கூடுதலாக இரண்டு கிலோமீட்டர் சென்று வர  வேண்டிய சூழ்நிலை உள்ளதால் ஏராளமான பொதுமக்களும், வழக்கறிஞர்களும்,  நீதிமன்றம் செல்ல ஒரு வழிப்பாதையில் செல்கின்றனர். இதனால் அடிக்கடி  விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல  சர்வீஸ் சாலை அமைத்து தர வேண்டும் என அமைச்சர் சி.வி சண்முகத்திடம் அவரது  இல்லத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.

அப்போது புதுச்சேரி  மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், பார் அசோசியேசன்  தலைவர் நாராயணன், செயலாளர் ராம் மனோகர், அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன்,  வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, கிருஷ்ணகுமார், மோகன் குமார், சாட்சாத்  மோகன், தமிழ், தீபக் குமார், சரவணன், சண்முகம் உள்ளிட்ட ஏராளமான  வழக்கறிஞர்களுடன் இருந்தனர்.

Related Stories: