சாராயம் விற்ற 4 பேர் கைது

திருக்கோவிலூர், ஜன. 28: திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சங்கராபுரம் அடுத்த பிரம்மகுண்டம் பகுதியில் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அன்னிகான் மகன் கணேசன் (39) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் உள்ள முள்செடியில் சாராயம் பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த போது, கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல், திருக்கோவிலூர் அருகே வேங்கூர் பகுதியில் சாராயம் விற்ற ஜெயபால் மனைவி லட்சுமி (40), திம்மச்சூர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ஜெயலட்சுமி (35), பாசார் கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் அய்யாதுரை (39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags :
× RELATED சாராயம் கடத்திய 4 பேர் கைது