×

லாரியில் எடுத்து சென்ற அரிசி சாலையில் சிதறியது

சிதம்பரம், ஜன. 28: சிதம்பரத்தை அடுத்த மணலூரில் மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில்களில் அரிசி மூட்டைகள் வரும். ரயில் நிலையத்திலிருந்து இந்த அரிசி மூட்டைகள் லாரிகள்  மூலம் எடுத்துச் செல்லப்பட்டு மணலூரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் வைத்து பாதுகாக்கப்படும். இந்நிலையில் நேற்று சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு லாரிகளில் அரிசி மூட்டைகள் ஏற்றிச் செல்லப்பட்டது. சில லாரிகளில் ஏற்றப்பட்ட அரிசி மூட்டைகளில் இருந்த அரிசி சாலை முழுவதும் கீழே கொட்டியபடியே சென்றது. இதைப் பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் லாரியை நிறுத்தி டிரைவரிடம் கூறியுள்ளனர். ஆனால் லாரி டிரைவரோ கடமைக்கு அரிசி மூட்டையை சரி செய்துவிட்டு அலட்சியப்படுத்திவிட்டு லாரியை வேகமாக ஓட்டிச் சென்றார்.

சிதம்பரம் ரயில் நிலையத்திலிருந்து மணலூர் சேமிப்பு கிடங்கு வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரமாகும். பல லாரிகளில் இவ்வளவு தூரத்திற்கும் அரிசி கொட்டியபடியே சென்றதால் ஏராளமான அரிசிகள் நாசமானது. இந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இங்கிருந்துதான் அரிசி மூட்டைகள் எடுத்துச் செல்லப்படும். இப்படி எடை குறைந்த அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு செல்லும்போது தட்டுப்பாடு அபாயம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி லாரிகளில் அரிசியை ஏற்றிச்செல்லும் லாரி டிரைவர்கள் மீது நட
வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...