×

வாலிபரை தாக்கியவர் கைது

விருத்தாசலம், ஜன. 28: விருத்தாசலம் அருகே கோ.மாவிடந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் மணிகண்டன் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் ராஜதுரை (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மணிகண்டனின் மனைவி மற்றும் அவரது தாயை, ராஜதுரை அசிங்கமாக திட்டிக் கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த மணிகண்டன் ஏன் திட்டுகிறாய் எனக் கேட்டதற்கு மணிகண்டனையும் அசிங்கமாக திட்டி தாக்கியதுடன், இரும்பு கம்பியால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கம்மாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது