×

திருச்சுழி ஒன்றியங்களில் 71வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சுழி, ஜன.28: திருச்சுழி ஒன்றியங்களில் 71வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திருச்சுழி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணகுமார் திருச்சுழி உள்ள சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியிில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். பின்பு சமுதாயகூடத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசீலன் மற்றும் ஊராட்சி செயலர் பிச்சை முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலுப்பையூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி திருமால் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு முன்பாக கொடியேற்றினார். பின்பு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் மற்றும் ஊராட்சி செயலர் சிவராம்குமார் ஆகியோர் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். வேடநத்தம் ஊராட்சியில் முத்துகுமாரி கொடியேற்றி கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) செல்வராஜ் மற்றும் ஊராட்சி செயலர் வேல்முருகன் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மறவர் பெருங்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னம்மாள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்பு ஊராட்சி மன்ற கட்டிடத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சி சாலை ஆய்வாளர் சுரேஷ்பாபு, ஊராட்சி செயலர் துர்காதேவி உட்பட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சலுக்குவார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லுபட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதேவி கருப்பசாமி கொடியேற்றி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் இங்குள்ள இசேவை மையத்தில் கிராமசபை கூட்டம்  நடைபெற்றது. தும்முசின்னம்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி கொடியேற்றினார். இதனை தொடாந்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் குமரேஸ்வரி பழனி பனையூரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கொடியேற்றினார். பின்பு கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். கண்டுகொண்டான் மாணிக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன் நரிக்குடி மேல்நிலைப்பள்ளியில் கொடியேற்றினார். பின்பு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கினார். தமிழ்பாடி ஊராட்சி மன்ற தலைவர் இருளன் அரசு பள்ளியில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபைகூட்டம் நடைபெற்றது. திருச்சுழி முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் தலைவர் சிக்கந்தர்சேட் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். போத்தம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு   ஊராட்சிமன்ற தலைவர் கோபால்ராஜ் கொடியேற்றினார். பின்பு பள்ளி தலைமையாசிரியர் அனுமந்தபெருமாள் சிறப்புரையாற்றி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இதேபோன்று சூச்சனேரிபட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் குணசேகரன் கொடியேற்றினார். பின்பு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற  மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Tags : Republic Day Celebration ,Church Unions ,
× RELATED மாநில இறகுப்பந்து போட்டியில் முதலிடம் தர்மபுரி மாணவருக்கு பாராட்டு