×

ராஜபாளையம் அருகே சேத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி நடவடிக்கை கோரி கலெக்டரிடம் மனு

விருதுநகர், ஜன.28: சேத்தூரில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்த ராமர் மற்றும் அவரின் மகன்கள், மகன், மருமகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்த மக்கள் கிருஷ்ணன் தலைமையில் கலெக்டர் கண்ணன், எஸ்பி., பெருமாள் ஆகியோரிடம்  அளித்த மனுவில்,  சேத்தூரை சேர்ந்த ராமர், இவர் பல ஆண்டுகளாக கந்துவட்டி மற்றும் ஏலச்சீட்டு தொழில் செய்து வருகிறார். கோடிக்கணக்கில் சீட்டு வசூல் செய்து வரும் ராமர் 10 வட்டிக்கு பணம் கொடுத்து வருகிறார். கூலிதொழில் செய்து வரும் எங்களை அணுகி ஏலச்சீட்டு போடும்படியும், நல்ல லாபம் கிடைக்கும், ஏலம் முடிந்த உடனுக்குடன் பணம் தருவதாக ராமர் உறுதி அளித்தார். அதை நம்பி சேத்தூரை சேர்ந்த பலர் ராமர் நடத்தும் ஏலச்சீட்டின் பல குரூப்களில் சீட்டு போட்டுள்ளனர்.

ராமர் சீட்டு நடத்துவதற்காக சாமி தெருவில் ஒரு வீடு வாங்கி தொழில் நடத்தி வருகிறார். ராமர் அடிக்கடி வசூலுக்கு வெளியே செல்வதால் ஏலச்சீட்டு வசூலை அலுவலகத்தில் இருந்து மகன்கள் சத்தியராஜ், சிவக்குமார் மகள் சுதா, மருமகன் சுந்தர்ராஜ் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏலச்சீட்டு முதிர்வு காலத்திற்கு பிறகு ராமரிடம் முதிர்வு தொகையை கேட்டபோது மகன்கள், மகள், மருமகன் ஏமாற்றிவிட்டதாக தெரிவித்தார். இதனால் சீட்டு கட்டிய 31 பேர் ரூ.20 லட்சம் இழந்துள்ளோம். பாதிக்கப்பட்ட 31 பேரும் சேர்ந்து சேத்தூர் போலீசில் புகார் அளித்தோம். 6 மாதத்தில் தந்துவிடுவதாக உறுதி அளித்தார். தற்போது யாருக்கும் பணம் தரமுடியாது என கூறுகிறார். ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி செய்த ராமர், மோசடிக்கு துணைநின்ற மகன்கள், மகள், மருமகன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Tags : collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...