×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

நாகை, ஜன.27: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் திமுக சார்பில் நாளை (28ம் தேதி) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாகை தெற்கு மாவட்ட கழக பெறுப்பாளர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாய நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்ப பெற்றம், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், விவசாயிகள் விரோத பா.ஜ.க., அ.தி.மு.க., அரசுகளை கண்டித்தும் தி.மு.க. சார்பில் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் கழக முன்னணியினர் கலந்து கொள்ள உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி, வார்டு கழக நிர்வாகிகள், ஒன்றிய குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் கழக செயல்வீரர்கள், பொதுமக்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், வணிகர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றியடைய செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள் தங்கள் பகுதியில் ஆர்ப்பாட்டம் குறித்து கழகத்தினருக்கு தகவல் தெரிவித்து அதிக அளவில் கலந்து கொள்ள செய்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிகையில் கூறியுள்ளார்.

Tags : DMK ,office ,
× RELATED திமுக கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு