×

அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு சமையலறையை சுத்தமாக பராமரிக்க அறிவுரை

கொள்ளிடம், ஜன.27: கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தை  ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவர் சமையலறையை சுத்தமாக வைத் துக்கொள்ளும்படி அறிவுறுத் தினார். ‘நாகை மாவட்டம் கொள்ளிடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை. கொள்ளிடம் ஒன்றியக்குழுதலைவர் ஜெயபிரகாஷ் நேற்றுமுன்தினம் திடீரென ஆய்வு நடத்தினார்.

சமைக்கப்பட்டிருந்த உணவை ருசி பார்த்து சோதித்தார். பின்னர் அவர் கூறுகையில், சத்துணவு மையங்களில் உள்ள சமையலறைகளில் கரி படிந்திருக்கக் கூடாது. சமைத்த உணவை மூடி பாதுகாக்க வேண்டும். முட்டைகள் தரம் வாய்ந்ததா என்பதனையும் கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். சமைத்த உணவை சத்துணவு அமைப்பாளர் ருசித்து பார்த்த பின்பே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். சுத்தம் சுகாதாரத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும். தரமற்ற உணவு சமைத்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வட்டார மருத்துவ அலுவலர் பபிதா, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் காமராஜ் பெற்றோர், ஆசிரியர் கழகத்தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags : kitchen ,Government Secondary School ,
× RELATED சென்னை வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட்...