×

நெல் கொள்முதல் பிரச்னையா? புகார் தெரிவிக்கலாம்

சிவகங்கை, ஜன. 28: நெல் கொள்முதல் நிலையத்தை கண்காணிக்கவும், புகார் தெரிவிக்கவும் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேளாண்மைத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நடத்தப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை விதையாக கொள்முதல் செய்திடவும், வியாபாரிகளின் தலையீட்டை குறைக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். விவசாயிகள் சார்பில் வீரபாண்டி (செல்.9843931516), முத்துராமலிங்கம் (செல்.9843564661), ஆதிமூலம் (செல்.9487943900), அய்யாச்சாமி (செல்.9865451217), மூக்கையா (செல்.9942956963), நாகநாதன் (செல்.978742660) ஆகியோரும், வேளாண் அலுவலர்கள் சார்பில் வேளாண் உதவி இயக்குநர்கள் மீனாட்சி சுந்தரம் (செல்.9444356421), நெப்போலியன் (செல்.8610543739), பத்மாவதி (செல்.9488259363) ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு இடர்பாடுகள் குறித்து மேற்கண்ட நபர்களிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை