சாலைப்பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு டூவீலரில் சென்ற திமுக எம்.எல்.ஏ

திருப்பரங்குன்றம், ஜன. 28: திருப்பரங்குன்றத்தில் போலீசார் மற்றும் சரவணா மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா டூவீலர் பேரணி நேற்று நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு துவங்கிய பேரணி, ரத வீதிகள் வழியாக மூலக்கரை, பசுமலை, பைக்கரா வழியாக சென்று பழங்காநத்தம் வரை சென்றது. பேரணியை திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதனகலா துவக்கி வைத்தார். இப்பேரணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். மேலும், பொதுமக்களுடன் சேர்ந்து தலையில் ஹெல்மெட் அணிந்து டூவீலரில் திருப்பரங்குன்றம் முதல் பழங்காநத்தம் வரை சென்றார். அவருடன் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் டூவீலரில் செல்வோர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அனைவரும் ஹெல்மெட் அணிந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: