நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை, ஜன. 28: மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (ஜன.29) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு கலெக்டர் வினய் தலைமை வகிக்கிறார். விவசாயம் சார்ந்த வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது பிரச்னை தொடர்பாக நேரிலோ அல்லது மனுவாகவோ தெரிவிக்கலாம் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: