×

கூட்டுறவுத்துறை மூலம் ரூ.22 ஆயிரம் கோடி கடன் வழங்கல் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை, ஜன. 28: மதுரை பழங்காநத்தம் பகுதியில் கூட்டுறவுதுறை வங்கியின் புதிய கட்டிடம் மற்றும் 19 சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, ‘கூட்டுறவு வங்கிகளில் வைப்புத்தொகை அதிகமாக இருப்பதால்தான் பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது, அனைத்து கூட்டுறவு வங்கிகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது, 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளது. நான் பதவிக்கு வந்தபின், கடந்த 9 ஆண்டாக கூட்டுறவுத்துறை லாபத்தில் இயங்குகிறது. ரூ.22 ஆயிரம் கோடியை கூட்டுறவுத்துறை மூலம் பயனாளிகளுக்கு கடனாக கொடுத்துள்ளோம். பொதுவிநியோகத்தில் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது. 32 ஆயிரத்து 900 நியாயவிலைக்கடைகள் மூலம் பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுகிறது’ என்றார்

Tags : Selur Raju ,Co-operative Department ,
× RELATED செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை...