மத்திய அரசு பணியில் இடஒதுக்கீடு கோரி கண்களில் கருப்பு துணி கட்டி சீர்மரபினர் நூதன போராட்டம்

மதுரை, ஜன.28: மத்திய அரசு பணியில் 9 சதவீத இட ஒதுக்கீடு கோரி, கண்களில் கருப்பு துணி கட்டி, மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சீர்மரபினர் நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சீர்மரபினர் நல சங்கத்தினர் கண்களில் கருப்பு துணி கட்டியும், தலையில் மஞ்சள் பை அணிந்தும் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, ‘மத்திய அரசு பணியில் சீர்மரபினருக்கு 9 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ரோகினி கமிஷனுக்கு காலநீட்டிப்பு வழங்க கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த போராட்டத்துக்கு சங்க பொதுசெயலாளர் நவமணி தலைமை வகித்தார். போராட்டத்தில் 3 சிறுமிகள் உள்ளிட்ட 10 பெண்கள் கலந்து கொண்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர், கலெக்டர் வினய்யிடம் அவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். மனுவை பெற்றக்கொண்ட கலெக்டர், அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார். இந்த போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: