ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் செவிலியர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

மதுரை, ஜன.28: ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டுமென செவிலியர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு செவிலிய மேற்பார்வையாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களின் கூட்டமைப்பு சார்பில், மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு கூட்டம் நேற்று நடந்தது. செவிலியர் பிரேமாஆனந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்ன பொன்னு கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினர். கூட்டத்தில், ‘சுகாதார ஆய்வின்போது கொடுக்கப்படும் குற்ற குறிப்பானைகள், தற்காலிக பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஊதிய முறைபாடுகளை களைய வேண்டும், செவிலியர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தினர். இதில் செவிலியர்கள் பாண்டியம்மாள், ஜெயராஜேஸ்வரன், துணைத்தலைவர் சாந்தி உட்பட பல கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: