பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

மதுரை, ஜன. 28: குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை அருகே நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள எஸ்பிஓஏ. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக போராசிரியர் கண்ணன் தேசிய கொடியேற்றி வைத்தார். பள்ளி முதல்வர் சீதாலட்சுமி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினார். * பழங்காநத்தத்தில் உள்ள ரூபி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி துணை முதல்வர் சங்கீதா தேசிய கொடியேற்றி வைத்தார். அது போல திருமங்கலம் அருகே புதுப்பட்டியில் உள்ள ரூபி கல்வியியல் கல்லூரியில் தாளாளர் வெங்கடேசன் கொடியேற்றினார். * திருமங்கலம் லிங்கா மெட்ரிக் பள்ளியில், பள்ளி முதல்வர் பிரேமலதா தேசிய கொடியேற்றினார்.

Advertising
Advertising

* மதுரை கே.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளித்தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஷேக் நபி வரவேற்றார். போலீஸ் உதவி கமிஷனர் மணிவண்ணன், தேசிய கொடியேற்றி, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். * ஒத்தக்கடையில் உள்ள ம.கி.ஒ.தொடக்கப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. ஒத்தக்கடை ஊராட்சி மன்றத்தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை வகித்து தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவா முன்னிலை வகித்தார். ஆசிரியர் மோசஸ் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தபாக் ரவி, உறுப்பினர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக் கலந்து கொண்டனர். மாணவர்களின் பாடல், கவிதை, பேச்சு, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை மாலா நன்றி கூறினார். ஆசிரியை ஹேமமாலினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Related Stories: