சோழவந்தான் பகுதியில் கிராம சபைக் கூட்டம்

சோழவந்தான், ஜன. 28: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமையில், துணைத்தலைவர் கேபிள் ராஜா முன்னிலையில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி செயலர் மனோபாரதி அறிக்கை வாசித்தார். மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டியில் தலைவர் பவுன்முருகன் தலைமையில், துணைத் தலைவர் பாக்கியம் செல்வம் முன்னிலையில் ஓவர்சீயர் மோகன் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். குருவித்துறையில் தலைவர் ரம்யா நம்பிராஜன் தலைமையில், துணை தலைவர் சீனிவாசன் முன்னிலையில், ஊராட்சி செயலர் சின்னமாயன் அறிக்கை வாசித்தார். ஒன்றிய அலுவலக கணக்கர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காடுபட்டியில் தலைவர் ஆனந்தன் தலைமையில், துணைத்தலைவர் பிரதாப் முன்னிலையில் ஊராட்சி செயலர் ரேவதி அறிக்கை வாசித்தார். ஊர் நல அலுவலர் அழகுராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரும்பாடியில் தலைவர் ஈஸ்வரி பண்ணைச்செல்வம் தலைமையில், துணைத் தலைவர் பிரியா சேகர் முன்னிலையில் ஊராட்சி செயலர் காசிலிங்கம் அறிக்கை வாசித்தார்.

கருப்பட்டியில் தலைவர் அம்பிகா, துணைத்தலைவர் சித்ரா தேவி முன்னிலையில் ஊராட்சி செயலர் முனியாண்டி அறிக்கை வாசித்தார். நாச்சிகுளத்தில் தலைவர் சுகுமாறன் தலைமையில், துணை தலைவர் ரேவதி முன்னிலையில் ஊராட்சி செயலர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். தென்கரையில் தலைவர் மஞ்சுளா அய்யப்பன், துணை தலைவர் கிருஷ்ணன் முன்னிலையில் ஊராட்சி செயலர் முனியராஜ் அறிக்கை வாசித்தார். மேலக்காலில் தலைவர் பரமேஸ்வரி, துணை தலைவர் சித்தாண்டி முன்னிலையில் ஊராட்சி செயலர் ஒய்யணன் அறிக்கை வாசித்தார். சித்தாலங்குடியில் தலைவர் கவிதாசெந்தில் தலைமையிலும், சி.புதூரில் தலைவர் பாண்டுரெங்கன் தலைமையிலும், திருவாலவாயநல்லூரில் தலைவர் சகுபர் சாதிக் தலைமையிலும், நெடுங்குளத்தில் தலைவர் சுப்பிரமணி தலைமையிலும், ரிஷபத்தில் தலைவர் மணி தலைமையிலும், திருவேடகத்தில் தலைவர் பழனியம்மாள் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலத்தில் தலைவர் கலியுகநாதன் தலைமையில், துணைத் தலைவர் செல்வி செல்வம் முன்னிலையில் ஊராட்சி செயலர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். இதில் ஒன்றிய பொறியாளர் கமலி, எட்டூர் கிராம கமிட்டி தலைவர் ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கண்ணனூரில் தலைவர் தமிழ்செல்வி தமிழரசன், பன்னியானில் தலைவர் காசிநாதன், முதலைக்குளத்தில் தலைவர் பூங்கொடி பாண்டி, சக்கரப்ப நாயக்கனூரில் தலைவர் ஜென்சிராணி, பானாமூப்பன்பட்டியில் தலைவர் மகாராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட துவரிமானில் தலைவர் கந்தசாமி, துணை தலைவர் லெட்சுமணன் முன்னிலையில் ஊராட்சி செயலர் பிரபு அறிக்கை வாசித்தார். கீழமாத்தூரில் தலைவர் ராசாத்தி துரைப்பாண்டியன் தலைமையிலும், கொடிமங்கலத்தில் தலைவர் உமாதேவி திருக்குமரன் தலைமையிலும், மேலமாத்தூரில் தலைவர் அபிராமி மணிகண்டன் தலைமையிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது. தலைவர்கள் பதவியேற்ற பின் நடந்த முதல் கூட்டம் என்பதால் குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், தெருவிளக்கு மற்றும் அந்தந்த கிராமங்களின் முக்கிய தேவைகள் குறித்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Related Stories: