×

ஜன.31ல் அரசாணை சப்கலெக்டர் தகவல்

இந்நிலையில் நேற்று மாலை பழநி சப்கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் பாலசமுத்திரம் பகுதி மக்கள், கோயில் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பாலசமுத்திரத்திற்கான குடிநீர் திட்டத்திற்கும், பழநி கோயிலுக்கான குடிநீர் திட்டத்திற்கும் ஒரே நேரத்தில்தான் அறிவிப்பு வெளியானது. ஆனால் பழநி கோயில் குடிநீர் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துவதாகவும், பாலசமுத்திரம் குடிநீர் திட்டத்தை வேண்டுமன்றே கால தாமதப்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதை தொடர்ந்து சப்கலெக்டர் உமா பேசுகையில், ‘பழநி கோயிலுக்கான குடிநீர் திட்டத்திற்கான மொத்த நிதியும் (ரூ.22 கோடி) கோயில் நிர்வாகத்தால் உடனடியாக செலுத்தப்பட்டு விட்டது. ஆனால் பாலசமுத்திரம் பேரூராட்சியில் 2013ல் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நபார்டு வங்கி நிதி உதவியுடன் பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஜன.31ம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விடும். அதுவரை பழநி கோயில் குடிநீர் திட்ட பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். அரசாணை வெளியிட்ட பின் கோயில் குடிநீர் திட்ட பணி துவங்கப்படும். அதன்பின் மிக விரைவில் பாலசமுத்திரத்திற்கான குடிநீர் திட்ட பணி துவங்கப்படும். என்றார்.

Tags : Gov. ,
× RELATED உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு...