பாலாறு அணையில் இருந்து பாலசமுத்திரத்திற்கு நேரடி தண்ணீர் கிராமமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், ஜன. 28: பாலாறு அணையில் இருந்து பாலசமுத்திரத்திற்கு நேரடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கிராமமக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். பழநி எம்எல்ஏ ஐபி செந்தில்குமார் தலைமையில் பாலசமுத்திரம் கிராமமக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘பழநி அருகேயுள்ள பாலசமுத்திரம் பேரூராட்சியில் பாலாறு- பொருந்தலாறு அணை உள்ளது.

இந்த அணையின் மூலம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழநி நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அணை அமைந்துள்ள பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு பாலாறு அணை ஆற்றுப்படுகையில் உறைகிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பாலசமுத்திரம் பேரூராட்சிக்கு அமைக்கப்பட்ட உறைகிணற்றில் தண்ணீர் போதிய அளவு கிடைப்பதில்லை. இதனால் தண்ணீர் விநியோகிக்கப்பதில் பற்றாக்குறையான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பழநி கோயிலுக்கு பாலாறு அணை ஆற்றுப்பகுதியில் ரூபாய் 22.77 கோடி செலவில் தடுப்பணை அமைத்து பைப்லைன் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: