×

தொழில் போட்டியா? போலீஸ் விசாரணை தெப்பக்குளம் பகுதியில்

திருச்சி, ஜன.28: திருச்சி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தரைக்கடை வியாபாரிகள் தங்களின் கடைகளை நீதிமன்ற உத்தரவினை மீறி மாநகராட்சி அகற்றி விட்டதாக கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் திருவெறும்பூர் மலைக்கோவில் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 64, 65வது வார்டு மக்களுக்கு குடியிருக்க நிரந்தர இடம் மற்றும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மனு அளித்து வருகிறோம். இதுவரை அதற்கு சரியான பதில் இல்லை. அனைவரும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் எங்களுக்கு உரிய இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்றனர்.

அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பழனிசாமி அளித்த மனுவில், ‘எங்கள் சங்கத்தை சேர்ந்த 18 பேர் திருச்சி என்எஸ்பி ரோடு தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி மாநகராட்சி அலுவலர்கள் தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள தரைக்கடைகளை திடீரென அகற்றிவிட்டனர். அப்போது அங்கு வந்த இளநிலை பொறியாளர் ராஜாவிடம், ‘தரைக்கடைகளை அகற்ற நீதிமன்ற தடை உள்ளது’ என கூறியபோது, நாங்கள் சொல்வது தான் சட்டம். கடையை காலி செய்யுங்கள். என்று அலட்சியமாக கூறியதுடன் கடைகளை அகற்றிவிட்டார். கடைகளை அகற்றிவிட்டு அங்கு கிரில் கேட் அமைத்துள்ளனர். மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவில், ‘வெல்டன் கமிட்டி வைத்து தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுத்த பிறகே மாநகராட்சியும் தேர்ந்தெடுத்த நிர்வாகிகளும் கலந்து பேசி அந்த முடிவின் மூலம் மாற்று இடம் கொடுத்த பிறகு முடிவு செய்ய வேண்டும்’ என கூறி உள்ளது.

எனவே உரிய விசாரணை நடத்தி மீண்டும் தரைக்கடை அமைத்து தந்து எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனர். மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் முருகன் அளித்த மனுவில், ‘பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பட்டியல் இன மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1,26,113 ஏக்கர் பஞ்சமி நிலம் இருப்பதாகவும், அதில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பட்டியல் இன அல்லாத சமூக மக்களிடம் கல்வி மற்றும் பிற நிறுவனங்களாகவும் அரசின் பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலங்களாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Police investigations ,area ,Theppakulam ,
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...