பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: 557 மனுக்கள் குவிந்தன

திருச்சி, ஜன.28:  திருச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 3 நபர்களுக்கு தலா ரூ.69,000 மதிப்பிலான அதிநவீன செயற்கை அவயம், 5 நபர்களுக்கு தலா ரூ.25,500 மதிப்பிலான அதிநவீன செயற்கை அவயம், 5 நபர்களுக்கு தலா ரூ.25,000 மதிப்பிலான சுய வேலைவாய்ப்பு வங்கிக் கடன் மான்யம் என மொத்தம், 13 பயனாளிகளுக்கு ரூ.4,59,500 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவராசு வழங்கினார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோரியது, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும் நிலம் தொடர்பான 142 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 5 மனுவும், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 84 மனுக்களும், சத்துணவு அமைப்பாளர் பணி மற்றும் வேலைவாய்ப்பு கோரியது தொடர்பான 15 மனுவும், ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோரி 38 மனுக்களும், புகார் தொடர்பான 9 மனுக்களும், கல்வி உதவி தொகை வங்கி கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரியது 5 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், சலவைப்பெட்டி, தொடர்பாக 42 மனுக்களும், பென்சன், நிலுவை தொகை கேட்டல் மற்றும் ஓய்வூதிய பயன்கள் மற்றும் தொழிலாளர் நல வாரியம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக 5 மனுவும, என மொத்தம் 345 மனுக்களும், இதர மனுக்கள் 212 என மொத்தம் 557 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பழனிதேவி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் ரெங்கராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரவிச்சந்திரன், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: