திருச்சியில் கழிவறையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை

திருச்சி, ஜன.28: திருச்சி ராமகிருஷ்ணாபாலம் அருகே கழிவறையில் வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இவர் பலூர் வியாபாரம் செய்து வந்தார். தொழில்போட்டி காரணமாக நண்பனே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தலைமறைவான நண்பனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி தென்னூர் அண்ணாநகர் சின்னசாமி நகரை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் மகன் முகமது இசாக் (21). பலூன் வியாபாரி. நேற்றுஇரவு 9.30 மணி அளவில் மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள பொது கழிப்பிடத்தில் உள்ள கழிவறையில் கழுத்தறுத்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலை அடுத்து விரைந்து வந்த கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவரது நண்பரும் அதே பகுதியை சேர்ந்த முகமது அனிபா என்பவரும் ஒரே தொழில் செய்து வந்தனர். இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தனர். இந்நிலையில் முகமதுஇசாக் கழுத்தறுத்து கொல்லப்பட்ட நிலையில் உடன் இருந்த கூட்டாளி முகமது அலிபா மாயமானது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தலைமறைவான முகமது அலிபாவை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சிக்கினால் மட்டுமே உண்மை தெரியவரும்.

ஒரேநாளில் இரட்டை கொலை பொதுமக்கள் பீதி திருச்சியில் தொடர்ந்து அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் திருச்சி அடுத்துள்ள கீரனூர் அருகே அதிமுக பிரமுகர் கொலை, திருச்சி உறையூரில் பழிக்குப்பழியாக ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று காந்தி மார்க்கெட்டில் பாஜக மண்டல செயலாளர் கொலை செய்யப்பட்டார். அன்றிரவு பலூன் வியாபாரி கொலை செய்யப்பட்டார். நேற்று ஒரே நாளில் இரட்டை கொலை நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து தொடர் கொலை சம்பவத்தால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவுக்கு தொடர்பா?: திருச்சியில் நேற்று அதிகாலை பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் இரு மதத்தினர் இடையே சம்பந்தம் இருப்பதாக பாஜகவினர் புகார் எழுப்பினர். இதற்கு மாநகர கமிஷனர் (பொ) அமல்ராஜ் மறுப்பு தெரிவித்தார். இதற்கிடையில் தற்போது கழிவறையில் கொலை நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலையில் பாஜகவினருக்கு தொடர்பு உள்ளதா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related Stories: