மீண்டும் கடைகள் அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை நீதிமன்ற உத்தரவை மீறி தரைக்கடைகள் அகற்றம் நெற்பயிரை தாக்கும் வைரஸ்க்கு ‘லட்சுமி’ பெயர் வைப்பதா?

திருச்சி, ஜன.28: நெற்பயிரை தாக்கும் புதுவிதை வைரஸ்க்கு லட்சுமி என பெண் தெய்வத்தின் பெயர் வைத்துள்ளதை இந்துக்களின் மதஉணர்வை மதித்து உடனடியாக பெயரை நீக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில், துறையூர் உப்பிலியபுரம், கிழக்கு தெருவை சேர்ந்த திருநங்கைகள் அளித்த மனுவில், ‘திருநங்கைகள் 8 பேர் உப்பிலியபுரத்தில் வாடகை வீட்டில் வசிக்கிறோம். வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டுகிறார். இதுவரை 10 முறை வீடு மாறிவிட்டோம். எங்கும் நிரந்தரமாக இருக்க முடியவில்லை. எனவே எங்களுக்கு ஆதிதிராவிடர் காலனி செல்லாயி கோயில் அருகே தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆம்ஆத்மி கட்சி மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் அளித்த மனுவில், ‘நான் கடந்த 2006ம் ஆண்டு ஜூன் முதல் 2018ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் நன்றாக தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு முன்பே வினாத்தாள் விலைக்கு விற்கப்பட்டதால் என்னால் அரசு பணிக்கு சேர முடியவில்லை. எனவே எனக்கு 5 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வேண்டும். அந்த கடனை 10 ஆண்டுகள் கழித்து திரும்ப செலுத்துவேன் என வழங்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால் அந்த மனுமீது எந்த விசாரணையும் இல்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு மீது எடுத்த நடவடிக்கை என்னவென்று கேட்டபோது, ரங்கம் தாலுகாவில் முறையான எந்த பதிலும் இல்லை. எனவே கோரிக்கையை நிறைவேற்றக்கோரி ஜனவரி 30ம் தேதி ரங்கம் தாலுகா அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். அல்லூர் சமூகஆர்வலர் நவநீதன் அளித்த மனுவில், ‘ஊராட்சி தலைவர்கள் பதவியேற்று ஒரு மாதம் ஆகியும் இதுவரை அவர்களுக்கு பஞ்சாயத்துராஜ் சட்டப்படி உரிய அதிகாரம் வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்ட தலைவர் சம்சுதீன் அளித்த மனுவில், ‘காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 மாதமாக சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம், இதய நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை. மருந்து வழங்குவதை நிறுத்திவிட்டனர். 10 நாட்களுக்கு உண்டான மருந்து மட்டுமே தருகின்றனர். மேலும் 20 நாட்களுக்கு தேவையான மருந்துகள் பெற துவாக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். அங்கு சென்றால் மாத்திரை வழங்காமல், நோயாளிகளை நாய்களை போல விரட்டுகின்றனர். எனவே முறையாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை அளித்த மனுவில், ‘தமிழகத்தில் தற்போது நெற்பெயிர்களை பாதிக்கும் வண்ணம் புதுவித வைரஸ் தாக்கியுள்ளதாகவும், அதை இந்துக்கள் தெய்வத்தை குறிக்கும் பெயரான லட்சுமி வைரஸ் என பெயரிட்டுள்ளதாகவும் செய்திகள் வருகிறது. இது புகையான் என ஏற்கனவே அழைக்கப்பட்டு வந்த ஒரு வித நோய். பல்லாயிரம் ஆண்டு தொன்மை மிகு கலாச்சாரத்தை கொண்ட நம் நாட்டில் இயற்கையோடு இரண்டற இணைந்து வாழ்வதையே முன்னோர் கடைபிடித்து வந்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக தானியங்களை மகாலட்சுமி அம்சமாக போற்றி வணங்கி வருகின்றனர். இப்படி வளங்களை அள்ளித் தரும் பெண் தெய்வத்தின் பெயரை வைரஸ்க்கு வைத்திருப்பது இந்து மக்களின் மத உணர்வையும், மனதையும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே இவ்விஷயத்தில் அரசு கனிவுடன் கவனத்தில் கொண்டு, வைரசுக்கு சூட்டப்பட்ட பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

உறையூர் மேட்டுத்தெருவை சேர்ந்த கோதண்டபாணி அளித்த மனுவில், ‘நான் எய்ட்ஸ், கேன்சர் நோய்களுக்கு வைர பவுடர் மூலிகை கலந்து மருந்து கண்டுபிடித்துள்ளேன். கடந்த 2009ம் ஆண்டு 36 பாக்கெட் வைர பவுடர் மருந்தை விலங்கு பரிசோதனைக்காக திருச்சி சித்த மருத்துவர் எடுத்தனர். ஆய்வின் முடிவில் வைர பவுடர் என தெரிந்து கொண்டு ஆய்வு முடிவை வெளியிடவில்லை. மீண்டும் 2019ம் ஆண்டு 4 பாக்கெட் மருந்துகளை ஆய்வுக்கு எடுத்தனர். அதன் முடிவையும் தரவில்லை. ஆனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: