கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் அய்யன் வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்ற வேண்டும்

மண்ணச்சநல்லூர், ஜன.28: திருச்சி-சேலம் நெடுஞ்சாலை துடையூர் அருகே அய்யன்வாய்க்காலில் விழுந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திருச்சி-சேலம் நெடுஞ்சாலை துடையூர் அருகே அய்யன்வாய்க்காலில் பழமையான மரம் விழுந்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அந்த மரத்தை அப்புறப்படுத்தாமலே உள்ளது. ஆற்றில் விழுந்த மரத்தை ஏலம் விட்டால் குறைந்தபட்சம் 5ஆயிரம் ரூபாய் முதல் 15 ரூபாய் வரை போகும். இது அரசுக்கு ஒரு இழப்பீடு என்று அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் தெரிவித்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் கூறும்போது, இந்த மரம் விழுந்து சுமார் 70 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி இதுவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் பாசன வாய்க்காலான அய்யன்வாய்க்காலில் தண்ணீர் திறந்து பாசனத்திற்கு வரவேண்டிய போதிய நீர் வராததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் இதுபோன்ற மரங்கள் அப்பகுதியில் விழுந்தும் அப்புறப்படுத்தாமலே உள்ளது. இதுஅரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தும். அதிகாரிகள் கண்டுகொள்ளாமலேயே உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறைஅதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: