கேலக்ஸி செஸ்ட், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நுரையீரல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருச்சி, ஜன.28: திருச்சி தில்லைநகர் 11வது குறுக்கு சாலையில் உள்ள கேலக்ஸி செஸ்ட் - மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவம், நுரையீரல் அறுவை சிகிச்சை, நுரையீரல் கேன்சர் மற்றும் குழந்தைகளுக்கான நுரையீரல் மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் நேற்றுமுன்தினம் நுரையீரல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் கணபதி சுப்பிரமணியன் தலைமையில் நடந்த இந்த முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இந்த முகாமில் நாள்பட்ட இருமல், இரவு நேர இருமல், காரணமில்லா மூச்சிரைப்பு, வீசிங், ஈஸினோபிலியா மூச்சுவிடும்போது விசில் சத்தம், ஆஸ்துமா, புகைப்பழக்கத்தால் மூச்சிறைப்பு, மழை மற்றும் பனிகாலங்களில் முச்சிறைப்பு உள்ளவர்கள், நாள்பட்ட சளி, இருமல் (குழந்தைகள் உள்பட), இருமலின்போது சளியுடன் கூடிய ரத்தம் வருதல், நுரையீரல் பிரச்னையில் நெஞ்சு வலி நோயாளிகள், நிமோனியா தாக்கம் கொண்டவர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை பெற்றனர். மேலும் இந்த முகாமில் தேவைப்பட்டவர்களுக்கு நெஞ்சக எக்ஸ்ரே மற்றும் நுரையீரல் செயல்திறன் பரிசோதனை ரூ.100 மதிப்பில் செய்யப்பட்டது.

Related Stories: